Skip to main content

10 மணி வரை 4 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 12/03/2025 | Edited on 12/03/2025
Alert for 4 districts until 10 am

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இரண்டு நாட்கள் தமிழகத்தின் பரவலாக மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று அதன்படி சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது.

குறிப்பாக குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்திய அறிவிப்பின்படி நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்