Published on 12/01/2019 | Edited on 12/01/2019

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. உலகளவில் மிகவும் பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண பலர் பல இடங்களிலிருந்து வருவார்கள். இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. பல இளைஞர்கள் மாடுபிடிப்பதற்காக உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். உடல் தகுதி தேர்வில் மருத்துவர்கள் ஒப்புதல் அளித்து சீட்டு வழங்கினால்தான், 17ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களால் கலந்துகொள்ள முடியும். இந்த தகுதி மட்டுமல்லாமல், போட்டி நடைபெறும் அன்று வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டிருக்கிறார்களா என சோதனை செய்யப்படும். இந்த சோதனைகள் அனைத்திலும் தகுதி பெற்றால் மட்டுமே ஜல்லிக்கட்டில் வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.