Published on 24/04/2019 | Edited on 24/04/2019

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த அஜின் ராஜ் என்பவர் மணிமுத்தாறு ஆயுதபடையில் காவலாராக பணியாற்றி வந்தார். கோதையாறு மின் உற்பத்தி மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து போலீஸார், தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.