திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் உள்பட வேடசந்தூர் எம்.எல்.ஏ . பரமசிவம் ஆகியோர் கலந்து வழங்கினார்கள்.
அதன் பின் ரெங்கநாத புரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை எம்.பி.யும். பாராளுமன்ற மன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதன் பின் பத்திரிக்கையரளர்களை சந்தித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையோ...புரட்சி தலைவரும், அம்மாவும் உருவாக்கிய இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை யாரும் அசைக்க முடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக அமோகமாக வெற்றி பெறும். அது போல் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லை. சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறேன். பல ஆண்டு காலமாக தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுனால் தான் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மத்திய அரசு உதவியுடன் விசாரிப்பதற்காகத் தான் சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.