Published on 22/06/2019 | Edited on 22/06/2019
அதிமுக தலைமை மழைவேண்டி தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தலைமையில் கோவிகளில் சிறப்பு யாகங்கள் நடந்து வருகிறது.
![admk yaham](http://image.nakkheeran.in/cdn/farfuture/VLOdNSaKjM4nJefLL_4aGsLL_0c6XO4GqJHPx0FI9Go/1561172751/sites/default/files/inline-images/asqwqwsx.jpg)
ஈரோடு பச்சைமலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் யாகம் நடைபெற்றது. திருச்சி, ஸ்ரீரங்கம், உறையூரில் நடைபெற்றுவரும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கடலூரில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் யாகம் நடைபெற்றுவருகிறது. அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் நடக்கும் யாகத்தில் ராஜன் செல்லப்பா பங்கேற்றுள்ளார்.