சென்னை திரும்பும் சசிகலா தன்னுடைய காரில் மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்து உள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் குணமானதையடுத்து இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவில் இருந்து கிளம்ப உள்ளார். இதையடுத்து அவரது காரில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. கொடியை பயன்படுத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சசிகலா தரப்பு அதனை புறக்கணித்து மீண்டும் அதிமுக கொடியை கட்டியுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் சென்னை புறப்பட உள்ளார்.