Skip to main content

அதிமுகவை பிஜேபி தான் ஆட்டிப் படைக்கிறது: காடுவெட்டி குரு பேட்டி..!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
அதிமுகவை பிஜேபி தான் ஆட்டிப் படைக்கிறது:
காடுவெட்டி குரு பேட்டி..!



வன்னியர் சமுதாய குடும்ப விழா, மதுரை மாவட்டம் நடத்தும் தென் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பார்க்கவ குல சமுதாயக் கூடம் கற்பகநகர் புதூரில் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் நடராஜன் வன்னியர் சங்க விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்

இதில் கலந்து கொண்ட முன்னால் எம்.எல்.ஏ காடுவெட்டி குரு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது அரசாங்கமாக இருக்கும் அதிமுகவை பிஜேபி தான் ஆட்டிப் படைக்கிறது. லஞ்சம் ஊழல் பெருத்துப் போய் இருக்கிறது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் ஊழல் வாதிகள் தான். இரு அணி என்று கூறிவிட்டு இப்போது டி.டி.வி.தினகரன் ஒரு அணி என்று நாடகம் ஆடுகிறார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆறுகளுக்கும், விவசாயிகளுக்கும், மதுக்கடைகள் ஆகியவைகளுக்கு அன்புமணி ராமதாஸ் தலைமையில் 1986ல் இருந்து இன்று வரை போராடி கொண்டு இருக்கிறோம். திமுக 50 வருடமாக ஆட்சி செய்து கல்வி, மருத்துவம், விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.

இடஒதுக்கீடுக்காக, உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவு நாள்வரும். செப் - 17ல் விழுப்புரத்தில் பா.ம.க மாநாடு நடைபெறும். எங்களுடைய பழக்கம் மக்களுக்கு ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேம், வாங்கவும் மாட்டோம். நீங்கள் பனத்தை மக்களிடம் கொடுத்தால் வாங்கி ஓட்டுக்களை மாற்றி தான் போடுவார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து தான் நிற்போம். இதில் மாற்றம் இல்லை என்றார்.

- ஷாகுல்

சார்ந்த செய்திகள்