Published on 22/09/2020 | Edited on 22/09/2020
விவசாய சட்டங்களுக்கு எதிராக வரும் செப்டம்பர்- 28 ஆம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதேபோல் தி.மு.க. தோழமைக் கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள இடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மேற்கில் கி.வீரமணி, சென்னை வடக்கில் கே.எஸ். அழகிரி, சென்னை தெற்கில் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
மேலும், சென்னை கிழக்கில் கே.பாலகிருஷ்ணன், தஞ்சையில் முத்தரசன், திருச்சியில் காதர் மொய்தீன், கடலூரில் தொல். திருமாவளவன், தாம்பரத்தில் ஜவாஹிருல்லா, கோவையில் ஈஸ்வரன், பெரம்பலூரில் ரவிபச்சமுத்து ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.