தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகாவினர் பேரணி நடத்தினர். நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், உணவு அமைச்சர் காமராஜின் அக்கா மகனுமான ஆர்.ஜி.குமார் தலைமையில், தேரடியில் துவங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று திருப்பாற்கடல் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஆர்.ஜி.குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பேரணில் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் பொண்.வாசுகிராம், டி,டி,வி தினகரன் அணியில் இருந்து கடத்தவாரம் அதிமுகவிற்கு தாவிய முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், உள்ளிட்ட ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மன்னார்குடியின் பாஸ் என்று அழைக்கப்பட்ட சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான திவாகரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சைலண்டாக ஜெயலலிதாவின் படத்திற்கு மாலர்தூவி மறியாதை செலுத்தியிருக்கும் நிலையில், அதிமுக அமைச்சர் காமராஜின் தரப்போ கூட்டத்தைத்திறட்டி பேரணி நடத்தியிருப்பது பேசும்பொருளாக மாறியுள்ளது.