Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை! 

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

A.D.M.K. The issue of the General Committee- hearing tomorrow in the Supreme Court!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு நாளை (21/11/2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

கடந்த ஜூலை 11- ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிச் செய்ய வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

 

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

 

அதில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே தடைக்கோரி இருப்பதாகவும், தீர்மானங்களை எதிர்த்து அல்ல என்றும், எனவே, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

இந்த மனுக்கள் நாளை (21/11/2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.     

 

சார்ந்த செய்திகள்