Published on 03/08/2019 | Edited on 03/08/2019
மதுரை மாநகராட்சி ஊழல், தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் கடந்த மாதம் 11 ம் தேதி சத்தியம் டிவியில் விவாத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அன்று இரவே அதனுடைய ஒளிபரப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
![Government Cable TV](http://image.nakkheeran.in/cdn/farfuture/dAvElOaKebwa1ZGnxqiCs3I7GHqviuTnIWpJmPFX0uM/1564838418/sites/default/files/inline-images/ccccc.jpg)
இந்த விஷயத்தை சத்தியம் டிவியின் நேயர்கள் 3 பேர் TDSAT எனப்படும் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் வழக்காக தொடர்ந்தனர். அதன் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பொரேஷனுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்தில் அரசு கேபிள் டிவியின் மீது வழக்கு தொடர்ந்த சிங்காரவேல் என்பவருக்கு அந்த தொகையை தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு TDSAT அபராதம் விதித்துள்ளது இதுவே முதல்முறை.