![Actress vijyalaxmi pressmeet](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ts0-3Cd9Vm6IpW8d_ymvK4YSx2zP9AvSNz6WQXM9RpU/1595946351/sites/default/files/inline-images/CXCCVGC_0.jpg)
'ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை விஜயலட்சுமி கடந்த 26-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, உடனடியாக மீட்கப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மன உளைச்சலில் இருப்பதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில் சிகிச்சை முடியும் முன்னரே தன்னை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், காயத்ரி ரகுராம் என்னுடைய நண்பர். நான் கஷ்டத்தில் இருப்பதால் மருத்துவமனை பில்-ஐ அவர்தான் கட்டியுள்ளார். ஆனால் யாரைக் கேட்டு என்னை டிஸ்சார்ஜ் பண்ண வைத்தார்கள் என்பதை மட்டும் என்னிடம் சொல்லுங்கள். நான், பி.ஜே.பி.-யிடம் காசு வாங்கிக் கொண்டு பேசுவதாகச் சீமான் சொல்கிறார். இவங்க என்னை ட்ரீட்மெண்ட் பண்ண விடாமல் தூக்கி வெளியே போட்டுவிட்டார்கள். என்ன அவசரம் வந்துச்சு, எனக்கு உயிருக்கு ஆபத்து என்றால் யார் பொறுப்பு என்கிறார் விஜயலட்சுமி.