Published on 12/10/2020 | Edited on 12/10/2020

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பா.ஜ.க தலைவர் நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் நேற்று முதல் வெளியாகி வருகிறது. முன்னதாக கரோனா பாதிக்கப்பட்டு, மத்திய அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அமைச்சர் அமித்ஷா குணமடைய வேண்டுமென குஷ்பு டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதனால், குஷ்பு பா.ஜ.கவில் இணையப் போவதாக தகவல்கள் பரவின. ஆனால் அதை முற்றிலுமாக குஷ்பு மறுத்திருந்தார். இந்நிலையில், நேற்று அவர் பா.ஜ.க.வில் சேர்வதற்காக டெல்லி சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.