நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய வரம்பிற்குள், முன்பகை காரணமாக வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய நிர்வாகிகளை அரிவாள், கத்தி மற்றும் இரும்புக்கம்பிக் கொண்டு கொலை முயற்சி சம்பவத்தினை அரங்கேற்ற, துரிதமாக செயல்பட்ட நெல்லை மாநகரக் காவல்துறை காயம்பட்டோர்களை மருத்துவமனையில் அனுமதித்தத்தோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளைக் கைது செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் சமாயினா ஷேக் முகம்மது மூப்பன் தெருவினை சேர்ந்த முகமது பஸ்லுல் இலாஹி மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் டி.என்.டி.ஜெ.எனப்படும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பினில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தவர்கள். சமீபத்தினில் கருத்து வேறுப்பாட்டின் காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய இவர்கள் அந்த அமைப்பிற்கு எதிராகவும், அதனின் தலைவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அதனின் தொடர்ச்சியாக மத்ரஸாக்களில் படிக்கும் இஸ்லாமியப் பெண்களிடம் தவறுதலாக நடக்கின்றார் அவ்வமைப்பின் தலைவரான பி.ஜெயினுல்லாபுதீன் என்று கூறியதோடு மட்டு மில்லாமல், "ஆபாச ஆடியோவினையும்" வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர். " இது எதிர் தரப்பிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியதாகவும், அதனின் தொடர்ச்சியாக வீட்டிற்குள் இருந்த பஸ்லுல் இலாஹி, அவரது மகன் மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் மீது அரிவாள், கத்தி மற்றும் இரும்புக்கம்பிக் கொண்டு இன்று காலையில் கொடூரத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இதனை செய்ய தூண்டியதே டி.என்.டி.ஜெ.வின் தலைவர் பி.ஜெ. "என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர் தாக்குதலுக்குள்ளான காயம்பட்ட மூவரும்.
மேலப்பாளையம் போலீசாரும் கொடூரத் தாக்குதல் நடத்திய பாளையங்கோட்டை மண்ணெணி சையது அலி, கண்ணா ரசூல், பால் அக்பர், நவாஸ் ஆகியோரை விரைவாக கைது செய்து விசாரித்து வருகின்றது. இச்சம்பவத்தால் அங்குப் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.