Published on 11/03/2021 | Edited on 11/03/2021
![Actor Senthil has joined the BJP](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pf2cepmgAkW9qxDy47syTVSO9Rc5qZawGHB3DyMrLxg/1615447187/sites/default/files/inline-images/etret_0.jpg)
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், தேர்தல் அறிக்கை என தீவிரமாக இயங்கி வருகின்றன. அண்மைக் காலமாகவே திரை நட்சத்திரங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.