சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கரோனா அறிகுறி இல்லாத நிலையில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், கரோனாவிலிருந்து குணமடைந்து வருவதாகவும் ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Today Sarath tested positive for Coronavirus in Hyderabad. He’s asymptomatic and in the hands of extremely good doctors! I will keep you updated about his health in the days to come. @realsarathkumar @rayane_mithun @imAmithun_264 @varusarath5
— Radikaa Sarathkumar (@realradikaa) December 8, 2020