















Published on 12/12/2020 | Edited on 12/12/2020
நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் முன் ரஜினிகாந்த் படத்துடன் வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டை அணிந்தவாறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என 100- க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, அங்கு குவிந்துள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.