Skip to main content

“தரச்சான்று இல்லாமல் செயல்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

 Action will be taken against private milk companies operating without certification Minister Mano Thangaraj

 

தரச்சான்று இல்லாமல் செயல்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் வல்லகுளம், வேப்பங்குடி, திருமலைரெட்டிபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து தோரணக்கல்பட்டியில் நடைபெற்று வரும் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்பண்ணை அமைக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “கரூர் மாவட்டத்தில் மாடு வளர்ப்பதற்கு நல்ல சூழல் அமைந்துள்ளது. 1 கோடியே 4 லட்சம் மதிப்பில் 4 குளிரூட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.3.50 கோடி மதிப்பில் பால் பண்ணை அமைக்கப்படுகிறது. ஆவின் பால் வரும் பாக்கெட் தடைசெய்யப்பட்ட தரமற்ற பாலித்தீன் பொருள் இல்லை. இருப்பினும் கோரிக்கையை ஏற்று பாட்டில் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க கடந்த மாதம் 5000 கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

 

ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பெருகி உள்ளது. அரசு நிறுவனத்தில் தரம் குறைந்த பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாது. தனியார் நிறுவனங்களுக்கு சளித்ததல்ல ஆவின் நிர்வாகம். மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க கடந்த மாதம் 5000 கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வு என்பது தவறான தகவல். தரமான பால், கலப்படம் இல்லாமல் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்கள் நல்ல தரம், விலையும் நியாயமாக உள்ளது. முறையான தரச்சான்று இல்லாமல் விற்கப்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்