புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 20 வார்டுகளை திமுக கூட்டணியும், 3 வார்டுகளை அதிமுக கூட்டணியும், ஒரு வார்டை தேமுதிக, 3 சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். அதிக பெரும்பான்மை உள்ள திமுகவே நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
நகராட்சி சேர்மன் தேர்தலுக்கான பணிகளில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிலையில் 13 மற்றும் 17வது வார்டுகளில் போட்டியிட்டுத் தோற்ற திமுக வேட்பாளர்கள் மஞ்சு மற்றும் சுசீலா ஆகிய இரு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இணைந்து கட்சி வேட்பாளர்களையே தோற்கடித்த திமுக நகர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலைஞர் படிப்பகத்தில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகக் கட்சியின் நகர நிர்வாகிகள் செயல்பட்டதால்தான் இரு வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பாக்கியலட்சுமி, கலையரசி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதேபோல சிபிஎம் போட்டியிட்ட வார்டிலும் திமுக சரியாக வேலை செய்யாததால் சிபிஎம் வேட்பாளர் தோல்வியடைந்தார் என்ற குற்றச்சாட்டையும் திமுக தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.