Skip to main content

மாணவனை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அண்ணாநகர் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி சின்னச்சாமி மற்றும் சுகன்யா. இவர்களின்  மகன் மதியரசு அங்குள்ள பனையம்பாளையம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

 

 Action against teacher who hit the student


நேற்று பள்ளிக்கு சென்ற மதியரசு மாலை பள்ளி முடிந்ததும் நடக்கவே முடியாமல் தனது வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு தனது பெற்றோரிடம் கால் வலிக்குது என கூறியுள்ளார். இதையடுத்து மதியரசுவின் இரண்டு கால்களிலும் சிவந்த நிறத்தில் தழும்பு காயங்கள் இருந்ததைக்கண்ட தந்தை சின்னச்சாமி அதிர்ச்சியடைந்தார். மாணவானிடம் விசாரித்தபோது மதியரசு வகுப்பறையில் அருகே இருந்த மாணவர்களிடம் பேசியதாகவும் இதைக்கண்ட பள்ளி ஆசிரியர் ஆறுச்சாமி தன்னை தடியால் கடுமையாக காலில் அடித்ததால் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். 

 

 Action against teacher who hit the student


இதையடுத்து தந்தை சின்னச்சாமி தனது மகன் மதியரசுவை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இவைகுறித்து தகவலறிந்த  சத்தியமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், உள்ளிட்ட அதிகாரிகள் பனையம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது ஆசிரியர் ஆறுச்சாமி மாணவன் மதியரசுவை அடித்து காயப்படுத்தி வை அடித்தது தெரிந்தது எனவே ஆசிரியர் ஆறுச்சாமி மாணவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியர் ஆறுச்சாமி வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுளள்ளதாக தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தொடக்கப்பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்