Skip to main content

சோதனை மேல் சோதனை; டிடிஎஃப் வாசன் மீது ஆந்திராவில் நடவடிக்கை

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Action against TDF Vasan who took the Frank video

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். டிடிஎஃப் வாசன் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதற்கிடையே, இது குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திருப்பதி மலையில் பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.

சார்ந்த செய்திகள்