மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேரும் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. அதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரும் மாயமான நிலையில் அவர்களை தேடப்பட்டு வருகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் தீயுடன் அதிகப் புகை வெளிப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாயமான இருவர் குறித்து தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. விபத்திற்குக்கான காரணம் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் அனல் மின் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.