




திருச்சி செல்வேந்திரன், சொல்வேந்தர் என்று அழைக்கப்படும் இவர், திராவிடர் விடுதலைக்கழகத்தில் தனது அரசியல் வாழ்க்கையை கிளைப்பொறுப்பாளராக ஆரமித்து, நகரச்செயலாளர், மாவட்ட துணை செயலாளர், தலைமைக்கழக பிரச்சார செயலாளர் என அடுத்தடுத்து பதவிகளை அலங்கரித்தவர், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளராக உள்ளார்.
திருச்சி உறையூர் சொந்தவூராக கொண்டவர் அவருடைய அப்பா நீலமேகம், அம்மா சிவகாமி, பரம்பரை பரம்பரையாக குடும்பத்துக்கு ஏகப்பட்ட நிலத்திற்கு சொந்தக்காரர்கள் செல்வேந்திரன் தாத்தா திருச்சி நகராட்சியில் முக்கிய பொறுப்பிலும், ஊர் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தவர் என்பதால் ஊரில் செல்வாக்கு மிக்க குடும்பம்,.பிறகு நீதிகட்சியில் இணைந்து பணியாற்றினார், இந்த பின்புலம் என். செல்வேந்திரனை பெரியார் கொள்கையுடன் இணைத்தது.
திருச்சி நேஷனல் கல்லூரியில் இன்டர் மீடியன் கோர்ஸ் படித்தார் அவர் படிக்கும் காலத்தில் எல்லாரும் பேசுவதை விட நாம் வித்தியாசமாக பேசவேண்டும் என யோசித்து ஆரம்பத்தில் வகுப்பறைகளில் பேசி பேசிப் பழகினார் பின் . கல்லூரி காலங்களுக்கு பிறகு அவருடைய ஏரியாவில் திருவிக மன்றம் ஒன்று இயங்கி வந்தது. அதில் வாராவாரம் அரசியல், இலக்கியம் சார்ந்த விவாதங்கள், சொற்பொழிவுகளில் பேசியிக்கிறார். அந்த பேச்சு தான் அவரை கால ஓட்டத்தில் பெரியார், கலைஞர், சின்னக்குத்தூசி, சோலை, ஜவகர் பெரிய இலக்கிய நட்பு வட்டத்திற்கு கொண்டு சென்றது.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாத நிலையில் மேடை பேச்சுகளை தவிர்த்து விட்டு எழுத்துக்கு ஓய்வு கொடுத்து வீட்டிலே ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில் என். செல்வேந்திரனுக்கு இன்று 22.08.2019 அவருக்கு 80 வது பிறந்த நாள் விழா உறையூரில் காமாச்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
பிறந்த நாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் திருச்சி தினமலர் பதிப்பு இணை ஆசிரியர் ராமசுப்பு, ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகள் சொல்லி ஆசீர் பெற்றனர். காலையிலே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவருடைய வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து ஆசீர் பெற்றார்.
கோவை ராமகிருஷ்ணன், பெரியார் சரவணன், கரூர் ராஜேந்திரன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குளித்தலை மாணிக்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் சேரன், வெல்லமண்டி சோமு, திமுக கே.என்.சேகரன், முத்திரையர் சங்க தலைவர் ஆர். விஸ்வநாதன், மற்றும் வெள்ளார் சங்கத்தின் ஹரி, மற்றும் திராவிடர் கட்சியினர். உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகன் எழில் தலைமையில் அவர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.