Skip to main content

தீபாவளி பண்டிகை பாதுகாப்புப் பணியில் 619 காவலர்கள்: எஸ்.பி. வருண்குமார் தகவல்

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
619 policemen on Diwali security duty says S.P. Varun Kumar

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் 619 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர், கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு வசதி ஏற்ப்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தீபாவளிக்காக துணிமணிகள் மற்றம் ஆபரணங்கள் வாங்குவதற்கு கடைவீதிகளுக்கு அதிக அளவில் வருவார்கள், அதனை முன்னிட்டு மக்கள் கூட்டத்தினிடையில் ஆங்காங்கே சீருடையல்லாத சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்காவலர்களை நியமிக்கப்பட்டு அவர்கள் மக்களோடு மக்களாக நின்று கண்காணித்து குற்றம் நடவாமல் தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சந்ததேகப்படும்படியான நபர்களை பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவி மையத்திலுள்ள தொலைபேசி எண்ணிற்கு (9487464651) தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டி விட்டு வெளி ஊருக்கு சென்றால் மேற்கண்ட எண்ணிற்கு தகவல் அனுப்பி பயன்பெற பொது மக்களை திருச்சி மாவட்ட காவல் துறை கேட்டுக்கொள்கிறது.

மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 44 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு, குற்றம் நடவாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிக்பாக்கெட் திருடர்களையும், கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிப்பவர்களையும் பிடிப்பதற்கும், பஸ்ஸில் பெண்களை கேலிசெய்பவர்களையும் பிடிப்பதற்கு தனித்தனியாக காவலர் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு உட்கோட்த்திற்கு தனித்தனியாக மொத்தம் 5 தனிப்படைகள் நியமிக்கப்பட்டுக் கண்காணித்து வருகிறன்றனர்.

குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கும் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 24 ஆய்வாளர்கள், 45 உதவி ஆய்வாளர்கள், 500 சட்டம் ஒழுங்கு காவலர்கள் மற்றும் 50 ஆயுதப்படை காவலர்களை நியமித்து தீவிர கண்காணிப்பில் மாவட்டம் முழுவதும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் போக்குவரத்தைச் சீர்படுத்த சுமார் 100 போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தீபாவளிக்கு வெடி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடன் கூட்டம் நடத்தி சட்டத்திற்கு உட்பட்டு விற்கவும், உரிமம் இல்லாமல் விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது, மீறும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வாரண்ட் நிலுவையிலுள்ள குற்றவாளிகள், முன் வழக்குகளில் பிடிபடாத குற்றவாளிகள் பட்டியல் தயார் செயயப்பட்டு அவர்களை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடைவீதிக்கோ, கோவிலுக்கோ மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கோ வரும்போது விழிப்புடன் செயல்பட்டு சந்தேகப்படும் நபர்கள் மற்றும் பொருட்கள் பற்றி உடனடியாக அருகில் உள்ள காவலரிடமோ அல்லது காவல் உதவி மைய எண் 9487464651-க்கோ தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் 30.10.2024-ஆம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி குரு பூஜையை முன்னிட்டு அனைத்து உட்கோட்டங்களிலும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி காவல் நிலையம் மோர்னிமலை மற்றும் நவல்பட்டு காவல் நிலையம் மாத்தூர் ரவுண்டா ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு குரு பூஜைக்கு செல்லும் வாகனங்களில் ஏதேனும் அபாயரமான ஆயுதங்கள், பதாகைகள் இல்லாவண்ணம் தணிக்கை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்