கடலூர் மாவட்டம், சிதம்பரம் மேல வீதியில் கல்வித் தந்தை சுவாமி சகஜானந்த பிறந்தநாள் விழா ஆர்.எஸ்.எஸ் சார்பில் இன்று (27-01-25) நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் இன்று சிதம்பரம் நகருக்கு வருகை தருகிறார்.
இதனைபொட்டி, சாமி சகஜானந்தாவின் கொள்கைகளை களவாட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலின் குரலாக ஒலிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் 100க்கும் மேற்பட்டவர்களை தங்க வைத்தனர். தமிழக ஆளுநரை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த போது அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.