பெரம்பலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ரங்கராஜன், துணை சூப்பிரண்டு ரவீந்திரன், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
![police](http://image.nakkheeran.in/cdn/farfuture/LouXX8vjfw21QZCpbiPdNXolhTPPTcK4hEuCKDHvO8k/1554389609/sites/default/files/inline-images/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg)
அப்போது பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே, வேகமாக வந்த ஒரு வாடகை காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதில் பணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தீவிர சோதனை நடத்தியும் பணம் இருப்பதற்கான அறிகுறி இல்லை. ஆனால் இந்த காரில் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற உறுதியான தகவலால் காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பிரித்து பார்த்த போது. ரூ.2 கோடி பணம் சிக்கியது தொடர்பாக குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அந்தோணி, மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தங்கதுரை (இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்), திருச்சியை சேர்ந்த பிரபாகரன் , மாநில துணை செயலாளர், திண்டுக்கல்லை சேர்ந்த தங்கம் , சென்னை கே.கே.நகரை சேர்ந்த கார் டிரைவர் மாரஸ் கிளைவ் (40) ஆகிய 4 பேர் மீதும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை எடுத்து செல்லுதல், வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக பணம் கடத்துதல், குற்றம் செய்ய முயற்சி, தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்பட 7 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ‘எல்பின்’ என்ற நிறுவனத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி வருமான வரித்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
![police](http://image.nakkheeran.in/cdn/farfuture/M8p0Aa5KoTmFZpEJ7scUZ3uDaRwxz80Mu9AsrDbrwac/1554389658/sites/default/files/inline-images/Parambalur%20%285%29_0.jpeg)
இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்-லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக பிரிவு மாநில துணைச் செயலாளர் ராஜா, அச்சு ஊடக பிரிவு மாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் காரில் சிக்கிய பணத்திற்கும் இந்த நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கிடைத்த தகவலில் விசாரணை நடத்தியும் ஒன்றும் சிக்காதால் அவர்களை விசாரணைக் பிறகு சிறையில் அடைப்பதற்காக பெரம்பலூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அசோக்பிரசாத் முன்னிலையில் ஆஜர் படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி போலிசார் போட்டிருக்கும் வழக்கு எதுவும் சிறை அனுப்புவதற்காக பிரிவுகள் இல்லாதால் அனைவரையும் ஜாமீனில் விடுவித்தார். சிறைக்கு செல்லாமலே அனைவரும் விடுதலையானர்கள்.
![ police](http://image.nakkheeran.in/cdn/farfuture/MzTJK3_LTI5eavMWCudtxetmfKTdlvYso2KXCsz27dE/1554389698/sites/default/files/inline-images/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20%281%29.jpeg)
இந்த நிதி நிறுவன அதிபர் ராஜாவை சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே ரவுடி சாமிரவி குரூப் கடத்தி பணம் பறித்தனர். இதன் அடிப்படையில் ரவுடி சாமிரவி குரூப் மீது வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கை வாபாஸ் வாங்க சொல்லி ரவுடி சாமிரவி குரூப் வழக்கறிஞர்கள் உதவியுடன் பேசி வந்தனர். இந்த நிலையில் ஒரு குரூப் இந்த ராஜா எங்களை மோசடி செய்து விட்டார் என்று ஒரு குரூப் புகார் கொடுத்த ராஜா கைதாகி ஜாமீனில் வெளிய வந்தனர். இந்த நிலையில் தான் தேர்தலுக்கு பணம் கொண்டு போனதாக தேர்தல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்த அடிப்படையில் பணம் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.