![38th Merchant Day Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/U6iEB43av_nFpt29J0RpCT3qh8KFsXyPeU3r9YJz1bc/1620199534/sites/default/files/2021-05/vanigar-sangam-2.jpg)
![38th Merchant Day Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/ag55PeBEGLN6f1Ws8kjZ0j46my0Z8OrIQRXLMTFUUeQ/1620199534/sites/default/files/2021-05/vanigar-sangam-1.jpg)
![38th Merchant Day Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/XBr7V_-dCeJibL0V6gYAkAKvxZg0jvTqpZ-ilCb3rBI/1620199534/sites/default/files/2021-05/vanigar-sangam-3.jpg)
![38th Merchant Day Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/cUmCTvrbd9PJDLP4ACMPUMN0mRsOGHCm_qOE1OKLJRw/1620199534/sites/default/files/2021-05/vanigar-sangam-4.jpg)
Published on 05/05/2021 | Edited on 05/05/2021
ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. வணிகர்கள் தினத்தன்று கடைகள் அனைத்தும் மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை, நாளை (06.05.2021) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்கத்தின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 38வது வணிகர் தினத்தை முன்னிட்டு சவரத் தொழிலாளர்கள் மற்றும் நலிந்த வணிகர்கள் 2,000 பேருக்கு 25 கிலோ அரிசி வழங்கினார்கள்.