
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 16,665 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 4,764 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,10,308 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,06,033 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 18 வயது மேற்பபட்டோருக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயது மேற்பபட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு தொடங்கியது. cowin.gov.in என்ற தளத்திலோ, ஆரோக்கிய சேது செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருவதால் ஒடிபி எண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 3 லட்சம் கோவிட்ஷீல்டு டோஸ் நாளை சென்னை வர இருக்கிறது. மும்பையில் இருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் கோவிட்ஷீல்டு நாளை காலை 9:25 மணிக்கு சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.