![tamil nadu election commission](http://image.nakkheeran.in/cdn/farfuture/zpwN3yW0JRQTd9kkecDDIY5nS93TeoUgbG1NMGD7s-g/1644044267/sites/default/files/inline-images/140_14.jpg)
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் 3 வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1வது வார்டில் முத்துச்செல்வி, 10வது வார்டில் ஜெயராமன், 11வது வார்டில் விமலா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.