Skip to main content
Breaking News
Breaking

"28 முன்களப் பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் நிதியுதவி" - முதல்வர் அறிவிப்பு...

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

25 lakh rupees ex gratia for front liners lost lives for corona

 

கரோனா பாதிப்பால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் ஆகியோர் கரோனா பரவலுக்கு ஆளாவதும், உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சூழலில், கரோனா தடுப்புப் பணிகளில் களப் பணியாளர்களுக்குத் தொற்று உறுதியானால் இலவச சிகிச்சை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பால் 28 முன்களப் பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்