Published on 26/03/2022 | Edited on 26/03/2022

சென்னையில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் கடந்த 16ம் தேதி டாஸ்மாக் கடை ஒன்றில் 200 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற அஜால் என்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் கள்ளநோட்டு தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் சாயின்ஷா, ராஜு, பிரபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.36 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.