Skip to main content

''தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவராவது இப்படி பேசி இருப்பாரா?'' - எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

"Would any political leader in the political history of Tamil Nadu have spoken like this? ''-MP Su. Venkatesan condemned

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தான் பேசும் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் பேசும் சு.வெங்கடேசன், ''பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பேசுகிறார், ‘உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது. உத்தரவு கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளுங்கள். உங்களைக் காப்பாற்ற தமிழக பாஜக இருக்கிறது.’ என்று. நீங்கள் யோசித்துப் பாருங்கள், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவராவது இப்படிப் பேசி இருப்பாரா? சட்ட ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும்; சமூக அமைதி காப்பாற்றப்பட வேண்டும்; மக்களின் வாழ்நிலை காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் இதுவரை தமிழ்நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.

 

முதல் முறையாக ஒரு கட்சியினுடைய மாநிலத் தலைவர் பொதுநிகழ்வில் உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது, துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது, உத்தரவு கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். பாஜக உங்களைப் பாதுகாக்கும் என்று அண்ணாமலை பேசுகிறார். அவர் மட்டும் இதைப் பேசவில்லை. இதே வசனத்தை டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பேசினார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆறு மாதங்களுக்கு முன்பு இதே வசனத்தை மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கலவரம் அது. பலர் உயிரிழந்தார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதாரமானது.

 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஒன்றிய அமைச்சர் இப்படி பேசலாமா? இது சரியா? என்று கேள்வி கேட்டோம். உடனடியாக மோடி நடவடிக்கை எடுத்தார். என்ன நடவடிக்கை எடுத்தார் தெரியுமா? சுட்டுத் தள்ளுங்கள் என்று பேசிய ஒருவர் ஒன்றிய இணை அமைச்சராக இருப்பது தேசத்திற்கு அவமானம். இனிமேல் அவர் கேபினட் அமைச்சராக மாறுவார் என்று, இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூரை அமைச்சராக மாற்றினார் மோடி. சுட்டுத் தள்ளுவோம் என்று பேசினால்; வன்முறையை தூண்டினால்; கலவரத்தை உருவாக்கினால் அவர்களைப் பாதுகாக்க மோடி இருக்கிறார்'' எனப் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்