தமிழக அரசியலில் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்தி தான் . இந்த தொகுதியில் திமுக சார்பில் திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்தும் , அதிமுக கூட்டணி சார்பாக ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர் . இருவருமே பொருளாதார ரீதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களாக பார்க்கப்பட்டார்கள் அதோடுமட்டுமில்லால் தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாகவும் வேலூர் பாராளுமன்ற தொகுதி பார்க்கப்பட்டது . ஏப்ரல் 1-ம் தேதி துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை கவனித்து வரும் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட சிலருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டனர்.


இதில், பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் பெட்டி பெட்டியாக தொகுதி வாரியாக பிரித்து இருந்த மாதிரி 11 கோடியே 54 லட்சம் ரூபாய் சிக்கியது எனவும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை பற்றி கேள்விகள் கேட்கும் போது அதற்க்கு சரியான விளக்கமும், பதிலும் தராததால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.