வரும் சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வர திட்டம் போட்டு வருவதாக சொல்கின்றனர்.
அதில் குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்று திமுகவின் இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நினைப்பதாக சொல்கின்றனர். கடலூர் மாவட்டம், வடலூரில் திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களை தான் கட்சியில புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். எனவே, தகுதியான இளைஞர்களை சேர்ப்பதில் நாம் கவனமாக இருந்து செய்லபட வேண்டும் என்று கூறினார்.
அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் நம் பணி சிறப்பாக இருந்தது. அதன் பயனாக உள்ளாட்சி தேர்தலில் 60% வெற்றியை பெற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் இளைஞரணிக்கு குறிப்பிட்ட அளவே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சி தலைமையிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார். உதயநிதியின் இந்த அறிவிப்பால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் கலக்கத்தில் இருப்பதாக சொல்கின்றனர். மேலும் திமுகவில் சமீப காலமாக பல்வேறு நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி வரும் நிலையில் உதயநிதி இப்படி கூறியிருப்பது சீனியர் நிர்வாகிகளை கலக்கத்தில் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.