
சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டிற்கு மாநாட்டு நிதியாக, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றரை கோடிக்கான காசோலையையும் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 12 லட்சத்திற்கான நிதியும் அமைச்சர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது.
மொத்தம் ஒரு கோடியே 62 லட்சம் மாநாட்டு நிதியினை கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்கம் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் மற்றும் எம்.ஆர்.கே. கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.ஆர்.கே.பி. கதிரவன், திமுக பொறியாளர் அணி தலைவர் துரை.கி.சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜி. கார்த்திகேயன், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆர். பாலமுருகன், த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முத்துக்குமார், வி.கே.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.