Published on 08/06/2019 | Edited on 08/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.அதிமுக சீனியர் வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர்.இதனால் ராஜ்யசபா சீட் மூலம் எம்.பி ஆகலாம் என்று கட்சியின் சீனியர்கள் காய் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகின.ஆனால் அதிமுக தலைமை ஒரு சில குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சீனியர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் தமிழக்தில் அதிகமான வாக்கு வங்கி உள்ள வன்னியர்,கவுண்டர்,தேவர்,தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஆகிய நான்கு சமுதாய மக்களில் இரண்டு பேருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.இதில் தேனி தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதால் மீதமுள்ள இந்த மூன்று சமுதாய மக்களில் இரண்டு பேருக்கு வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது.மேலும் கூட்டணியில் பாமகவை சேர்ந்த அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று கூறியதால்,கவுண்டர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய பிரிவுகளில் உள்ள இரண்டு பேருக்கு கொடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.