திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மாநகர செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது .
திருச்சி பாலக்கரை ரவுண்டானா, ஜெயில் பேட்டை, குப்பாங்குளம் மேம்பாலம், சூசையப்பர் கோவில், உப்புபாறை, முஸ்லீம் தெரு, சகாயமாதா கோவில், வி. எம்.பேட்டை வளைவு,பஜனை கூடத்தெரு, தர்மநாதபுரம், மல்லிகைபுரம் மெயின் ரோடு, துரைசாமிபுரம், நாகநாதர் டீஸ்டால், தனமணி காலனி, கோவிந்த கோனார் தெரு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரசமரம், கீழப்புதூர் நாகநாதர் டீ கடை காளியம்மன் கோவில், எடத்தெரு விறகு மந்தை வழி, ரெங்கசாமி பூங்கா, புதுத்தெரு, சபரி ஆஸ்பத்திரி சந்து,மோட்சராக்கினி கோவில், கெம்ஸ்டவுன்,சந்தியாகப்பர் பாளையம் வழி, செங்குளம் காலனிகாவேரி திரைஅரங்கம், உடையான்தோட்டம், பருப்புகாரத்தெரு மெயின்ரோடு, எடத்தெரு அண்ணாசிலை ஆகிய பகுதிகளில்ம திமுக வேட்பாளர் துரை. வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துரைவைகோவை ஆதரித்து பேசியதாவது:- மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண்கள் திட்டம், இலவச பேருந்து பயணம் தந்த விடியல் பயணம் என பல்வேறு திட்டங்களை தந்த நமது முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும், வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றவுடன் சுங்கச்சாவடிகள் அகற்றப்படவும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் பெறவும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் விலை பாதியாக குறைக்கவும், நீட் தேர்வில் இருந்து நம் குழந்தைகள் விலக்கு பெற்றிடவும் நம்முடைய வேட்பாளர் துரை. வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, பகுதி செயலாளர் ராஜ் முகமது, வட்டக் கழக செயலாளர்கள் சேகர், நலங்கிள்ளி, சுரேஷ், தனுஸ்கோடி, சில்வியா, கருணாநிதி, கோவிந்தராஜ், எடிட்டன், ஞனசேகர், சீனிவாசன், மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.