Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம்... (படங்கள்)

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வரை மிகவும் அமைதியான முறையில் வாக்களித்து வருகிறார்கள். வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் கல்பட்டு வாக்குச்சாவடியில் தமது வாக்கை அளித்தார் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு தொகுதியில் வாக்கு இல்லை காரணம் அவரது வாக்கு விழுப்புரம் டவுனில் உள்ளது அவர் அங்கேதான் குடியிருக்கிறார். 

மேலும் பூண்டி துறவி, சங்கீதமங்கலம் ஆகிய வாக்குச்சாவடிகளில் ஓட்டு மெஷின் வேலை செய்யாததால் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

விக்கிரவாண்டியில் வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பந்தல் அமைத்து வாக்காளர்களை அழைத்துச்செல்ல அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பெண் இன்ஸ்பெக்டர் பூங்கோதை வாக்குச்சாவடிக்கு 200 மீட்டருக்கு அப்பால் தான் பந்தல் இருக்கவேண்டும் அருகில் இருக்கக்கூடாது என பந்தலை பிரிக்க முயற்சி செய்ய திமுகவின்ருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

அதே போல் பத்திரிகையாளர்களையும் படம் எடுக்கக்கூடாது என இன்ஸ்பெக்டர் பூங்கோதை பிரச்சனை செய்து செய்துள்ளார். மிதமான சாரல் மழையிலும் வாக்காளர்கள் சந்தோஷமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்