Published on 30/07/2019 | Edited on 30/07/2019

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்றத் தேர்தலுக்காக திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளன. இந்த நிலையில் உளவுத்துறை தமிழக அரசுக்கு ஒரு அறிக்கை கொடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இருந்த திமுக ஆதரவு மனநிலை பொதுமக்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை. திமுகவுக்கு ஆதரவான மனநிலையில்தான் பொதுமக்கள் உள்ளனர். முத்தலாக் மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தால் இஸ்லாமியர்கள் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆகையால் அதிமுக வெற்றி பெறுவது கடினம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளது.