![AMMK Members joined in DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/vpxcw8NuBlgby01F6Iz5pu_BT3PaI3uPDq56O_kDYyw/1626853693/sites/default/files/2021-07/th-3_15.jpg)
![AMMK Members joined in DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/iUjGFJik8UKPaDnfyVFp8ijPtXwbsDZBzvoWPwvHomM/1626853693/sites/default/files/2021-07/th-2_20.jpg)
![AMMK Members joined in DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/ippOMRfiPzxvNjw863p-zLon2eZye696V9DEeGv77lM/1626853693/sites/default/files/2021-07/th_18.jpg)
![AMMK Members joined in DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/kRDcVUMRYEgY5xEct_nRDtnqtj0_2NxXnm80imf7oRc/1626853693/sites/default/files/2021-07/th-1_17.jpg)
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில், இன்று (21.07.2021) திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவருமான வ.து. நடராஜன், இவரது மகனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தவருமான வ.து.ந. ஆனந்த் ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஒரத்தநாடு சேகர் என அமமுகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி என 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ., ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.