Skip to main content

"திமுக வெற்றி பெற்றாலும் ..." விசிக கட்சி வன்னியரசு!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி  பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மேலும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை  8141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதத்தின் போது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

vck



நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேனி தொகுதியை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று திமுக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் வேலூர் தொகுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திமுகவிற்கு பின்னடைவு தான் என்று தெரிவித்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை தோல்வியடையச் செய்து விட வேண்டும் என்று மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும் தீவிரமாக முயற்சிகளை எடுத்தனர். ஆனால், வேலூரில் அதுபோன்ற முயற்சி நடைபெறவில்லை. இருப்பினும் வாக்கு வித்தியாசம் என்பது குறைவாக இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்று வன்னியரசு கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதோடு மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி வலுவாக இருக்கும் போது திமுக கூட்டணி வெற்றி பெற்றது முக்கியமான ஒன்றாக நாம் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் .

 

சார்ந்த செய்திகள்