2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார்.
விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி. மாற்று மத நம்பிக்கைகளை இவர் கொச்சை படுத்தியது உண்டா. முழு இந்து விரோதி. pic.twitter.com/Qq7RiPBTkP
— H Raja (@HRajaBJP) December 26, 2019
அதில், பெரியாரின் நினைவு தினத்தன்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார். அதில், ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார். ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது "டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும்" என்று கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில் பெரியார்வாதிகளைப் பற்றி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி. மாற்று மத நம்பிக்கைகளை இவர் கொச்சை படுத்தியது உண்டா. முழு இந்து விரோதி என்று கருத்து கூறியுள்ளார்.