Published on 23/06/2018 | Edited on 23/06/2018
நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் வளர்மதி தினகரன் குறித்து பேசியது.
18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வந்தவுடனே எங்ககிட்ட இருந்து ஒருத்தரு போனாரு. அவரு சும்மா இல்லை. பஃபுன் மாதிரி, இந்த சினிமா, சர்க்கஸ்ல வருமே அதுமாதிரி. இடையில், இடையில் வந்துறாரு பெரிய அறிவுஜீவி மாதிரி. இவுங்களை பத்தியெல்லாம் தெரிஞ்சதுனாலதான் அம்மா ஒரு அடி தள்ளியே வைத்திருந்தாங்க, வீட்டுக்குள்ள வராதே காலை வெட்டிடுவேன் அப்படினு சொன்னாங்க அம்மா.
ஆனால் அம்மா இல்லாத நேரத்துல இந்த கட்சியில் இருக்கும் கடைக்கோடித் தொண்டன் வரை அனைவரும் தன் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று கணக்குபோட்டு வந்தா அண்ணா திமுக தொண்டன் யாராவது ஏத்துக்குவாங்களா? அம்மாவிற்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் நாங்கதான் நடத்துவோம் அப்படினு நெனச்சா நடக்குமா. கட்சியும், ஆட்சியும் எங்ககிட்டதான் இருக்கு. அண்ணன் ஈ.பி.எஸ். இருக்காரு, அண்ணன் ஓ.பி.எஸ். இருக்காரு. இரண்டுபேரும் இரட்டை இலைகளைப்போல கட்சியை காத்துவருகிறார்கள், அதில் என்ன சந்தேகம். இங்கதான் எல்லாரும் இருக்கோம், யாராவது ஒரு ஆள் புது ஆள் இருக்காங்களா. எல்லாரும் 1972களிலிருந்து கொடி புடிச்சு, இரத்தமும், வேர்வையும் சிந்தி கட்சியை வளர்த்தவங்க.