சென்னையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை மற்றும் திமுக இளைஞரணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இளைஞரணி செயலாளராக என்னை நியமித்து மூன்றரை வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களில் முதல்வர் கலந்துகொள்ளும் முதல் இளைஞரணி நிகழ்ச்சி இதுதான்.
ஜூன் 5 ஆம் தேதி இந்த பயிற்சி பாசறையை நடத்த ஆரம்பித்தோம். முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் நடந்தது. முதல்வர் அதை நேரலையில் பார்த்து நன்றாக நடத்தினீர்கள் என பாராட்டினீர்கள். மேலும், தொடங்கியது முக்கியமில்லை., அதைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனச் சொன்னார். முதல்வர் ஒரு விஷயத்தை கையில் எடுத்தார் என்றால் அது முடியும் வரை விடமாட்டார்” எனக் கூறினார்.
இதன் பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் அவருக்கு துணை நிற்கும் துணைச் செயலாளர்கள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். நான் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று மூன்றரை வருடங்கள் ஆகிறது ஆனால் தலைவரை ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை என உதயநிதி சொன்னார். அதைத்தான் நான் கேட்கின்றேன். ஏன் கூப்பிடவில்லை. அதுதான் எனக்கும் புரியல” எனக் கூறினார்.