![Udayanidhi re-appointed as DMK's youth secretary](http://image.nakkheeran.in/cdn/farfuture/B8wxx9NcGc5G_5o7knbqCktsMccqVLNehuDWXAJ98dg/1669186521/sites/default/files/inline-images/379_4.jpg)
திமுகவின் உட்கட்சித் தேர்தல் 90% முடிவடைந்த நிலையில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி தேர்தல் நடந்தது.
திமுகவின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுக மகளிர் அணிச் செயலாளராக இருந்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ஜோயஸ், ரகுபதி, இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன் மற்றும் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவின்சன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.