Published on 20/03/2019 | Edited on 20/03/2019
திருச்சியில் அமமுக தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்தபின் பேசிய அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இவ்வாறு கூறியுள்ளார்.

வானிலையை காரணம் காட்டி இடைத்தேர்தலை நிறுத்தினாலும் நிறுத்துவார்கள். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அதனால் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து சின்னத்திற்காக காத்திருக்கிறோம். மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்கிறோம். 27ம் தேதி முதல் முழுவீச்சில் தேர்தல் பரப்புரை நிகழும்.