கடந்த 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி. தற்போதைய தேர்தல் குறித்த அவரது கருத்தை அவர் நேற்று தெரிவித்தார். அவர் கூறியதாவது,

இந்த மக்களவை தேர்தலில் அதிகளவில் பணம் செலவழிக்கப்படும், கட்சிகளின் படை பலம் வன்முறையில் ஈடுபடும், வெறுப்புணர்வு அதிகளவில் இருக்கும் என நினைக்கிறேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால், பல குழப்பங்கள் ஏற்படும். இப்படியான சூழ்நிலைகள் உருவானால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தேர்தல் ஆணையத்துக்கு பெரிய சவாலாக இருக்கும். அடுத்த மக்களவை கூடுவதற்கு என தேதி உள்ளது. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதை தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும். பல மாநிலங்களில் நிலவும் தன்மைகளை ஆராய்ந்துதான் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும். அதை கேள்வி கேட்க முடியாது.