மது பாட்டில்களில் நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு எனக் குறிப்பிட்டு இருந்தாலும் இந்த சமுதாயத்தில் மது என்பது ஒரு பிரதான பொருளாக மாறிவிட்டது. வீட்டு விசேஷங்களில் தொடங்கி சமுதாயத்தில் நடக்கும் நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும் அங்கு மது என்பது மது பிரியர்கள் மத்தியில் முக்கியப் பங்காக உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் நாட்டையே அச்சுறுத்தும் கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாத்து கொள்ள கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முமுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதில் அத்தியாவசிய பொருட்கள் தவிர மதுக் கடைகள் உட்பட குறிப்பிட்ட சில அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் சில, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அதிமுக அமைச்சர் தங்கமணி பதில் கூறியுள்ளார். அதில், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை. மேலும் அதுபோல வதந்திகளைப் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் இதுவரை மது கிடைக்காத மன உளைச்சலில் 10 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.