தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் தே.மு.தி.க.வின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் மற்றும் அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் படி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி), விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), கே.வி.குப்பம் (தனி), ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், செங்கம் (தனி), கலசப்பாக்கம், ஆரணி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி (தனி), ஏற்காடு, மேட்டூர், சேலம் (மேற்கு), நாமக்கல், குமாரபாளையம், பெருந்துறை, பவானிசாகர் (தனி), கூடலூர் (தனி), அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), வால்பாறை (தனி), ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை (தனி), கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர் (தனி), திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், பண்ருட்டி, கடலூர், கீழ்வேளூர் (தனி), பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான் (தனி), மதுரை (மேற்கு), அருப்புக்கோட்டை, பரமக்குடி (தனி), தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் (தனி), ஆலங்குளம், இராதபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.