
]இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு இன்று (27-04-25) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறக் கூடிய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், சிவானந்தா காலனி பகுதியில் திராவிட தமிழர் பேரவை சார்பில் பொது மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். முதல் நாளான இன்று, ரூ.9.67 கோடி செலவில் 6500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, மகளிருக்காக நம்முடைய அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களால் இன்றைக்கு இந்திய நாட்டிலேயே வேலைக்கு செல்கின்ற மகளிர் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது மிகப்பெரிய ஒரு சாதனையை தமிழ்நாட்டு மகளிர் படைத்து வருகிறீர்கள். இன்றைய விழாவில பட்டா வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கையும் நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 220 பேருக்கு இந்த மேடையிலே பட்டா வழங்கப்பட இருக்கின்றது. பட்டா என்பது வெறும் ஆவரம் கிடையாத. உங்களுடைய இடத்தின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டபூர்வ உரிமை. உங்களுடைய உரிமையை நம்முடைய அரசு இன்றைக்கு நிலைநாட்டி இருக்கின்றது.
அதே போல, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான அந்த சட்ட மோசோதாவை சென்ற வாரம் நம்முடைய முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் 13,000 மாற்றுத்திருனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக பொறுப்புக்கு வர இருக்கிறார்கள். இப்படி அனைத்து தரப்பையும் கவனத்தில் கொண்டு நம்முடைய முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்துவால் தான் இன்றைக்கு இந்தியாவிலேயே 9.69% வளர்ச்சியோடு தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் விட முதல் இடத்தில் இருக்கின்றது.
இந்த வளர்ச்சி இன்னும் உயர வேண்டும் என்றால் அதற்கு இந்த அரசிற்கு உங்களுடைய ஆதரவு தேவை. இந்த அரசு என்றைக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருக்கும். மக்களாகிய நீங்களும் இந்த அரசிற்கு என்றைக்கும் துணை நிற்க வேண்டும், பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். இந்த அரசினுடைய திட்டங்களை சாதனைகளை பலன்களை நலத்ததிட்டங்களை உங்களுடைய உறவினர்கள் நண்பர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்களுக்காக இந்த அரசும் நம்முடைய முதலமைச்சரும் இன்னும் கூடுதலாக உழைக்க தயாராக இருக்கிறார்கள்” என்று பேசினார்.